President Jharkhand Visit: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அடுத்த வாரம் 2 நாள் பயணமாக ஜார்க்கண்டிற்கு செல்ல உள்ளார்.
President Jharkhand Visit: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அடுத்த வாரம் 2 நாள் பயணமாக ஜார்க்கண்டிற்கு செல்ல உள்ளார்.
Published on: February 6, 2025 at 2:02 pm
குடியரசுத் தலைவர் ஜார்க்கண்ட் பயணம்:குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அடுத்த வாரம் ஜார்க்கண்டிற்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிப்.14 ஆம் தேதி ராஞ்சிக்கு வந்து, மறுநாள் பிஐடி மெஸ்ராவின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. ராஞ்சி துணை ஆணையர் (டிசி) மஞ்சுநாத் பஜந்திரி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நெறிமுறையின்படி சரியான நேரத்தில் ஏற்பாடுகளை முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
விமான நிலையம், ராஜ்பவன் மற்றும் நிகழ்வு நடைபெறும் இடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நோடல் அதிகாரிகள் மற்றும் உதவி நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவரின் போக்குவரத்துப் பாதையில் உள்ள அனைத்து உயரமான கட்டிடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி கொடுத்த பா.ஜ.க: கருத்து கணிப்பு முடிவுகள்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com