Delhi Exit poll: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தள்ளதுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

February 17, 2025
Delhi Exit poll: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தள்ளதுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
Published on: February 5, 2025 at 10:41 pm
டெல்லி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான சூழலைக் காட்டுகின்றன. மேலும், ஆம் ஆத்மி கட்சி (AAP) குறிப்பிடத்தக்க பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக் கணிப்புகளின்படி, 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா 43க்கு மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பான்மைக்கான 36 இடங்களை விட அதிகமாகும். ஆம் ஆத்மி தோராயமாக 26 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் 1 அல்லது 2 இடங்களை மட்டுமே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக வெற்றி பெற்றால் ஆம் ஆத்மியின் கோட்டையை கவிழ்த்துவிடும். ஒரு தசாப்தத்திற்கு பிறகு டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். 2020 ஆம் ஆண்டில் 70 இல் 62 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது தெரிகிறது.
ஒரு காலத்தில் டெல்லியில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்க தொடர்ந்து போராடி வருகிறது. அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் வெளியேற்றப்படும் என்று கணித்துள்ளன. கருத்துக் கணிப்புகள் எவ்வாறாக இருப்பினும், வாக்கு எண்ணிக்கை வருகிற 8ஆம் தேதி நடைபெறும்போதுதான் முடிவுகள் உறுதியாகும்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com