Jaffar Express train in Pakistan: பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை ராணுவத்தினர் எவ்வாறு தாக்கி கடத்தினர் என்பது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Jaffar Express train in Pakistan: பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை ராணுவத்தினர் எவ்வாறு தாக்கி கடத்தினர் என்பது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Published on: March 12, 2025 at 5:27 pm
Updated on: March 12, 2025 at 11:16 pm
இஸ்லாமாபாத், மார்ச் 12, 2025: பாகிஸ்தானின் போலனில் பெஷாவர் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) பயங்கரவாதிகள் மார்ச் 11, 2025 தாக்கி கடத்தினார்கள். இந்த ரயிலில் 450க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக வீடியோக்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில், துப்பாக்கிதாரிகள் வைத்திருந்த 190 பணயக்கைதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையின் போது, 30 தாக்குதல்காரர்களைக் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
🚨🇵🇰 Visuals of the attack and seizure of Jaffar Express by Baloch Liberation Army have emerged, highlighting the violence and turmoil in Balochistan. The world must pay attention to the plight of the Baloch people.
— THE SQUADRON (@THE_SQUADR0N) March 12, 2025
Video Courtesy – HAKKAL MEDIA#Balochistan #HumanRights… pic.twitter.com/gu7JlwYfbd
இதற்கிடையில், தற்கொலை குண்டுதாரிகள் பணயக்கைதிகளுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டதால் மீட்பு நடவடிக்கைகள் சிக்கலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, பி.எல்.ஏ போராளிகள் ரயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து ரயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் ரயிலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தக் காட்சிகள் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க பாகிஸ்தான் ரயில் கடத்தல்.. யார் இந்த பலூச் விடுதலை இராணுவம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com