ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி? அமெரிக்க செனட்டில் அதிரடி மசோதா!

Russia and Iran Act of 2026: ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் 86-11 வாக்குகளில் நிறைவேற்றியுள்ளது.

Published on: August 8, 2026 at 3:34 pm

வாஷிங்டன், ஆக. 8, 2026 : ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் முக்கிய நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றியுள்ளது. “லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம், 2026” என பெயரிடப்பட்ட இந்த மசோதா 86-11 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது. உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவின் எரிசக்தி வருவாய் துணைபுரிவதாகக் கூறி, அதன் முக்கிய வாங்குநர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கம்.

இந்தியா, சீனா பாதிப்பா?

மசோதா சட்டமாகி, அதில் வழங்கப்பட்ட அதிகாரத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தினால், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் முதல் 5 நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்க முடியும். தற்போதைய சூழலில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதனால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும், 100% வரி தானாக அமலுக்கு வராது; அதிபருக்கு வழங்கப்படும் அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஈரானுக்கு புதிய கட்டுப்பாடுகள்

மசோதாவில் ஈரான் தொடர்பான தடைகளும் இடம்பெற்றுள்ளன. 1996-ம் ஆண்டின் ஈரான் மீதான தடைகள் சட்டம் (Iran Sanctions Act) காலாவதியாகும் நிலையைத் தடுத்து, அதன் அமல்பாட்டை 2031 வரை நீட்டிக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இதன் கீழ் தொடரும். ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதே மசோதாவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

லிண்ட்சே கிரஹாம் பெயரில் மசோதா

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால் ஆகியோர் இந்த இரு கட்சி மசோதாவை முன்னெடுத்தனர். கடந்த ஜூலை 11-ம் தேதி கிரஹாம் உயிரிழந்த நிலையில், அவரது பெயரில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு செல்ல உள்ளது.

இதையும் படிங்க : தாய்லாந்து பள்ளியில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன்: 6 பேர் பலி

பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட இந்து கோவில்! இந்தியா–பிரான்ஸ் உறவுக்கு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி
India-France Ties

பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட இந்து கோவில்! இந்தியா–பிரான்ஸ் உறவுக்கு புதிய அத்தியாயம்: பிரதமர்

நேபாள கோர வெள்ளம், நிலச்சரிவு: 600-க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களில் சிக்கி தவிப்பு! மீட்புப் பணிகள் தீவிரம்
Nepal Floods

நேபாள கோர வெள்ளம், நிலச்சரிவு: 600-க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களில் சிக்கி தவிப்பு! மீட்புப்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com