தாய்லாந்து பள்ளியில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன்: 6 பேர் பலி

Thailand School Shooting: தாய்லாந்தின் நொந்தபுரி மாகாணத்தில் உள்ள பள்ளியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் என 6 பேர் உயிரிழந்தனர்.

Published on: August 7, 2026 at 12:54 pm

பாங்காக், ஆக. 7 2026 : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு அருகே அமைந்துள்ள நோந்தாபுரிமாகாணத்தில் உள்ள ‘தேப்சிரின் நோந்தாபுரி’ உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவன் ஒருவன் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த கொடூரச் சம்பவத்தில் 3 ஆசிரியர்கள் மற்றும் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அரச தாய்லாந்து காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் திரைராங் பிவ்பான் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து இந்தத் துப்பாக்கியை எடுத்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் மாணவர்கள் சிலர் வகுப்பறைகளுக்குள் பதுங்கியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் வகுப்பறைகளில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிரதமர் அனுதின் இரங்கல்

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாய்லாந்தில் கடந்த பிப்ரவரி மாதம் தெற்குப் பகுதியில் உள்ள பள்ளியிலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற நிலையில், தற்போது நொந்தபுரி பள்ளியில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இம்ரான் கானுக்கு நீதி வேண்டும்.. மாபெரும் பேரணிக்கு தயாராகும் பாகிஸ்தான்?

புலம்பெயர்ந்தோர் நெருக்கடி எதிரொலி… ஸ்பெயினுடனான திறந்த எல்லை பயணத்தை இத்தாலி ஏன் நிறுத்தியது?
Schengen Row

புலம்பெயர்ந்தோர் நெருக்கடி எதிரொலி… ஸ்பெயினுடனான திறந்த எல்லை பயணத்தை இத்தாலி ஏன் நிறுத்தியது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com