Donald Trump: 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
Donald Trump: 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
Published on: September 26, 2025 at 11:14 am
Updated on: September 26, 2025 at 12:43 pm
நியூயார்க், செப்.26, 2025: வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா 100% வரி விதிக்கும் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (செப்.25, 2025) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அக்டோபர் 1, 2025 முதல், ஒரு நிறுவனம் அமெரிக்காவில் தங்கள் மருந்து உற்பத்தி ஆலையை கட்டாவிட்டால், எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துப் பொருளுக்கும் 100% வரி விதிக்கப்படும். எனவே, கட்டுமானம் தொடங்கப்பட்டிருந்தால், இந்த மருந்துப் பொருட்களுக்கு எந்த வரியும் இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!” என டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
அதாவது, அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளைக் கட்டும் நிறுவனங்களுக்கு மருந்து வரிகள் பொருந்தாது எனவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். எனினும், அமெரிக்காவில் ஏற்கனவே தொழிற்சாலைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு வரிகள் எவ்வாறு பொருந்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய- கனடா உறவு.. ஜெய்சங்கரை சந்திக்கிறார் அனிதா ஆனந்த்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com