Mauritius-Poll | மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக நவீன் ராம்கூலம் பதவி ஏற்கிறார்.
Mauritius-Poll | மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக நவீன் ராம்கூலம் பதவி ஏற்கிறார்.
Published on: November 12, 2024 at 7:20 pm
Mauritius-Poll | இந்தியப் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடான மொரிஷியஸ் நாட்டில் நவம்பர் 10 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நேற்று (நவ. 11) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த 2 முறை வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம்(எம்எஸ்எம்) இம்முறை தோல்வியை தழுவியது.
பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான – பார்டி டிராவைலிஸ்ட்(பிடி’ஆர்’) மற்றும் மொரீஷியன் ஆயுதப்படை இயக்கம்(எம்எம்எம்), நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
இந்நிலையில், நவீன் ராம்கூலம்த்திற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மொரீஷியஸ் நாட்டுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது; இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com