பழுப்பு நிறப் பையா.. ஜேபிமார்கன் பெண் நிர்வாகி மீது பாலியல் புகார்.. நீதிமன்றத்தில் வழக்கு!

JP Morgan Exec : ஜேபி மார்கன் நிர்வாக இயக்குநர் லோர்னா ஹஜ்டினி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது; இதுதொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: May 1, 2026 at 8:07 pm

நியூயார்க், மே 1, 2026: ஜேபி மோர்கன் நிர்வாக இயக்குநர் லோர்னா ஹஜ்டினி மீது பாலியல் மற்றும் இனவெறி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வங்கி உள்துறை விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என ஜேபி மோர்கன் மறுத்துள்ளது.

இந்த வழக்கை இந்தியர் ஒருவர் தாக்கல் செய்துள்ளதாகவும் முதலில் அவர் ஜான் டோ என அறியப்பட்ட நிலையில் அவரது பெயர் சிராயு ராணா எனவும் கூறப்படுகிறது.
அந்தப் புகாரில் பழுப்பு நிறப் பையா என கூறியதாகவும், தன்னுடன் பாலியல் உறவு வைக்காவிட்டால் நிறுவனத்தில் முக்கிய பதவிகள் கிடைக்காது என்றும் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

மறுப்பு

இதற்கிடையில், “நான் எந்த தவறான நடத்தை செய்ததில்லை” என வழக்கறிஞர்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் “முழுமையாக மறுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

வங்கி நிலைப்பாடு

இது தொடர்பாக நிறுவன ஹெச்.ஆர், மற்றும் சட்டத்துறை விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் “அடிப்படை ஆதாரமற்றவை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ரிலையன்ஸ் அனில் அம்பானிக்கு சிக்கல்.. ரூ. 3,034 கோடி சொத்துக்கள் முடக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்


Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com