Bank Jobs | பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் பணி; கல்வித் தகுதி, சம்பளம் செக் பண்ணுங்க!
Bank Jobs | பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் பணி; கல்வித் தகுதி, சம்பளம் செக் பண்ணுங்க!
Published on: November 12, 2024 at 8:37 pm
Bank Jobs | பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபியில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிசியோதெரபியில் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 02 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி காலம்
விண்ணப்பதாரர்கள் தொடக்கத்தில் இரண்டு வருட ஒப்பந்த காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள். தேர்வு செய்யபப்படுபவரின் ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்பு வங்கியால் மதிப்பாய்வு செய்யப்பட்டு திருப்திகரமாக இருந்தால், ரிடெய்னர்-ஷிப் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.
பணியிடம் ஜெய்ப்பூர்
கடைசி தேதி
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 16, 2024 ஆகும்.
தேர்வு முறை
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி்
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி ஆட்சேர்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி பதவிக்கான தகுதியை உடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பலாம்.
காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து ஆதார ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி ஆட்சேர்ப்பு 2024-க்கான அதிகாரப்பூர்வ இணையதத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி,
மண்டல அலுவலகம் ஜெய்ப்பூர்,
30-31 மோகன் டவர்,
பிரின்ஸ் சாலை,
வித்யுத் நகர், அஜ்மீர் சாலை,
ஜெய்ப்பூர்,
பின் -302021
இதையும் படிங்க உங்கள் கண்களுக்கு ஓர் சவால்; பனி மூடிய மலையில் கழுகு: கண்டுபிடிங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com