Khalistan Terorrist arrested in Canada | கனடாவில் காலிஸ்தான இயக்கத்தின் முக்கிய பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Khalistan Terorrist arrested in Canada | கனடாவில் காலிஸ்தான இயக்கத்தின் முக்கிய பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on: November 10, 2024 at 11:45 pm
Updated on: November 10, 2024 at 11:47 pm
Khalistan Terorrist arrested in Canada | காலிஸ்தான் பயங்கரவாதி அர்தீப் சிங், கனடாவில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10, 2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. அர்ஷ் தல்லா என்ற அர்தீப் சிங் இந்திய அரசாங்கத்தால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர் ஆவார்.
இவர் மீது வெளிநாட்டில் இருந்து காலிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார்கள் உள்ளன. இந்த நிலையில் இவர் தற்போது கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அர்தீப் சிங், கைது செய்யப்பட்டுள்ளது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் கொல்லப்பட்ட நிகழ்வில் இந்தியாவிற்கு பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரத்தில் இந்திய தூதர் மீதும், அவர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை ஆரம்பம் முதலே இந்தியா திட்ட வட்டமாக மறுத்து வருகிறது. இதற்கிடையில் தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஜஸ்டின் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அடிப்படை பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இது போன்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில் கனடாவில் அர்தீப் சிங்கின் கைது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கனடாவில் பதுங்கியிருக்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பாகிஸ்தான் குவெட்டா ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com