Israeli Strike on Northern Gaza | காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
Israeli Strike on Northern Gaza | காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
Published on: November 10, 2024 at 10:32 pm
Israeli Strike on Northern Gaza | ஜபாலியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் இந்த தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போர் காரணமாக காசாவின் மக்கள் தொகையில் 90 சதவீத மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஏற்கனவே 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு காசா முனையில் உள்ள ஒரு முகாம் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 9 பெண்கள் உள்பட 17 பேர் இறந்ததாக காசா சிட்டியில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை இயக்குனர் பாதல் நயிம் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க பாகிஸ்தான் குவெட்டா ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com