Pakistan quetta railway station | பாகிஸ்தான் குவெட்டா ரெயில் நிலையத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
Pakistan quetta railway station | பாகிஸ்தான் குவெட்டா ரெயில் நிலையத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
Published on: November 9, 2024 at 1:54 pm
Pakistan Quetta Railway Station | பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரெயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்திற்கு முன்பு அங்கிருந்து ரெயில் ஒன்று புறப்பட்டதாகவும், அந்த ரெயில் புறப்படுவதற்கு முன்பாக இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க சிட்னி ; திடீரென வெடித்த விமான எஞ்சின்; 174 பயணிகள் நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com