Sidney | சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் எஞ்சின் திடீரென வெடித்தது.
Sidney | சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் எஞ்சின் திடீரென வெடித்தது.
Published on: November 8, 2024 at 5:00 pm
Sidney | சிட்னி விமான நிலையத்தில் இருந்து பிரின்பேனுக்கு மதியம் விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில மணிநேரத்தில் விமானத்தின் வலது என்ஜின் திடீரென வெடித்து தீ பற்றியது. இதனால் விமானம் 3வது ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் தீயை அணைத்தனர். விமானத்தில் பயணித்த 174 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தால் விமான நிலைய பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு விமானத்தில் பலத்த சத்தம் கேட்டதாகவும், பின்னர் வலதுப்புற என்ஜினில் சிக்கல் ஏற்பட்டதாகவும் இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் விமானி விளக்கினார்.
இதையும் படிங்க சீனா வாங்க, விசா இலவசம்: எந்தெந்த நாடுகள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com