China | நமது அண்டை தேசமான சீனா, மேலும் 9 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டித்துள்ளது.
China | நமது அண்டை தேசமான சீனா, மேலும் 9 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டித்துள்ளது.
Published on: November 2, 2024 at 4:18 pm
China | தென் கொரியா, நார்வே மற்றும் பின்லாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை சீனா நீட்டிக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் நவம்பர் 8 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நாட்டவர்கள், வணிகம், சுற்றுலா பல்வேறு காரணங்களுக்காக 15 நாள்கள் தங்கிக் கொள்ளலாம்.
மேலும், “இந்தக் கொள்கை டிசம்பர் 31, 2025 வரை அமலில் இருக்கும்” என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் கடந்த மாதம் விசா விலக்கு மற்றும் பிற தொடர்புடைய கொள்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
அப்போது இது வெளிநாட்டினர் வருகை மற்றும் நாட்டில் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று அந்நாடு கூறியது. இது குறித்து பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் “பயண ஏற்றம் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஸ்ரீநகரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; 2 வீரர்கள் மாயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com