New Delhi | ஏழைகளுக்கு அதிகம் உதவி செய்வோர் பட்டியல் வெளியாகி உள்ளது.
New Delhi | ஏழைகளுக்கு அதிகம் உதவி செய்வோர் பட்டியல் வெளியாகி உள்ளது.
Published on: November 8, 2024 at 4:15 pm
New Delhi | எடல்கிவ் ஹுருன் இந்தியா என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், ஏழைகளுக்கு அதிக அளவில் உதவி செய்வோர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-ம் நிதியாண்டுக்கான நன்கொடையாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில், இதில்,எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ்நாடார் (வயது 79) குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது.
2024 நிதியாண்டில் மட்டும் சிவ்நாடார் குடும்பம் ரூ.2,153 கோடி நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார் சிவ்நாடார். இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பமும் (ரூ.407 கோடி), மூன்றாவது இடத்தில் பஜாஜ் குடும்பமும் (ரூ.352 கோடி) இடம்பெற்றுள்ளது.
நன்கொடையாளர் பட்டியலில் முதல் பத்து இடங்களில், குமாரமங்கலம் பிர்லா குடும்பம் (ரூ.334 கோடி), கவுதம் அதானி குடும்பம் (ரூ.330 கோடி), நந்தன் நிலேகனி (ரூ.307 கோடி), கிருஷ்ணா சிவுகுலா ரூ.228 கோடி), அனில் அகர்வால் குடும்பம் (ரூ.181 கோடி), சுஷ்மிதா மற்றும் சுப்ரடோ பக்ஷி (ரூ. 179 கோடி), ரோகிணி நிலேகனி (ரூ.154 கோடி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு இந்த பட்டியலில் 203 பேர் இடம் பெற்றுள்ளநிலையில், 96 பேர் புதிய நன்கொடையாளர்கள் ஆவர். அவர்கள் மட்டும் ரூ. 8,783 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க பாரத ரத்னா அத்வானிக்கு 97வது பிறந்தநாள்: புகைப்பட செய்தி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com