Maharashtra | வீர சாவர்க்கர், பால் தாக்கரேவை வெளிப்படையாக புகழ முடியுமா? என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
Maharashtra | வீர சாவர்க்கர், பால் தாக்கரேவை வெளிப்படையாக புகழ முடியுமா? என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
Published on: November 8, 2024 at 6:54 pm
Maharashtra | இந்துத்துவா சித்தாந்தவாதியான வீர சாவர்க்கரையும், சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயையும் பகிரங்கமாகப் புகழ்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவ.8, 2024) சவால் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தனது பரப்புரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, “பால் கேசவ் தாக்கரே மற்றும் வீர சாவர்க்கரை ராகுல் காந்தி பகிரங்கமாக பாராட்டுவாரா? எனக் கேள்வியெழுப்பினார்.
அப்போது மோடி, “காங்கிரஸோ அல்லது அதன் யுவராஜோ (ராகுல் காந்தியைக் குறிப்பிட்டு) தங்கள் பேரணிகளின் போது வீர் சாவர்க்கரைப் புகழ்ந்து பேசட்டும். ராகுல் காந்தியால் அதைச் செய்ய முடியாது. வீர் சாவர்க்கரின் தியாகத்தையும் அவரது காலாபானியில் இருந்த நாட்களையும் (பிரிட்டிஷ் இந்தியாவில் அறியப்பட்ட செல்லுலார் சிறை) நினைவு கூற முடியுமா?
ராகுல் காந்தியை இதனை பேச வைக்க மகா விகாஸ் அகாதி கூட்டணி முயற்சிக்கட்டும். மேலும், சாவர்க்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதிப்பதாக குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, ”தேர்தல் முடியும் வரை சாவர்க்கரை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துமாறு மகா விகாஸ் அகாதி கூடடணி கேட்டுக்கொண்டுள்ளது” என்றார்.
உத்தவ் தாக்கரே, அவருடைய சிவசேனா (UBT) அதன் நிறுவனர் பால் தாக்கரேவின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இந்துத்துவா கட்சியாகும், மேலும், அக்கட்சி சாவர்க்கரை மராட்டிய ஹீரோவாகக் கருதுகிறது.
சாவர்க்கரையோ அல்லது பாலாசாகேப்பையோ மதிக்காத காங்கிரஸுடன் உத்தவ் கட்சி எப்படி இணைய முடியும்? கடந்த காலங்களில் சாவர்க்கரைப் பற்றி அறமற்ற கருத்துக்களை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க மராட்டிய மண்ணில் பிறந்தவர்களுக்கு இலவச கல்வி: உத்தவ் தாக்கரே வாக்குறுதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com