Alsari Joseph | மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Alsari Joseph | மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: November 8, 2024 at 7:10 pm
Alsari Joseph | பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது கேப்டன் ஷாய் ஹோப்புடன் பகிரங்கமாக தகராறு செய்ததார் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்.
இந்த நிலையில், இவருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து மேற்கிந்திய தீவுகள் அணி நடவடிக்கை எடுத்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை மேற்கிந்திய தீவுகள் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நடந்த ஆட்டத்தின் போது, நான்காவது ஓவரில் ஜோர்டான் காக்ஸின் விக்கெட்டை வீழ்த்திய சிறிது நேரத்திலேயே ஜோசப் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் ஜோசப் ஆறாவது ஓவருக்குத் திரும்பினார், ஆனால் 12வது வரை பந்துவீசுவதைத் தவிர்த்தார். இந்த நிலையில், ஜோசப் தனது 10 ஓவர்களில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கொடுத்து, காக்ஸ் மற்றும் டான் மௌஸ்லியின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அல்ஸாரியின் நடத்தை கிரிக்கெட் விதிகளுக்கு ஒத்துபோகவில்லை. மேலும் நிலைமையின் தீவிரத்தை முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க டெஸ்ட் போட்டியை 4 நாள்களாக குறைக்க வேண்டுமா? முன்னாள் கேப்டன் கருத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com