Dilip Vengsarkar | டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாள்களாக குறைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.
Dilip Vengsarkar | டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாள்களாக குறைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.
Published on: November 5, 2024 at 10:30 pm
Dilip Vengsarkar | டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாள்களாகக் குறைப்பது கிரிக்கெட் சமூகத்தில் நீண்ட காலமாக விவாதமாக இருந்து வருகிறது. இதற்கிடையில், உலகெங்கிலும் வளர்ந்து வரும் T-20 போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாள்காக குறைக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
இது குறித்து, டெஸ்ட் போட்டிகளின் கால அளவை 4 நாள்களாக குறைக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், “டெஸ்டுகள் நான்கு நாள் ஆட்டங்களாகக் குறைக்கப்பட வேண்டும்.
ஏனென்றால் பெரும்பாலான போட்டிகள் நான்கு நாட்களுக்குள் முடிவடைகின்றன. இதனால் நிதியையும் சேமிக்க முடியும்” என்றார்.
தொடர்ந்து, “மேற்கிந்திய தீவுகள் போன்ற ஒரு அணிக்கு உலகின் பிற பகுதிகளுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு செல்வது நிதி ரீதியாகவும், மிகவும் விலையுயர்ந்ததாகவும் உள்ளது” என்றார்.
மேலும், “மூன்று நாட்களில் போட்டிகள் முடிவடையும் போது ஐந்து நாட்களுக்கு டிக்கெட்டுகளை விற்பது நியாயமற்றது” என்று வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க கபில்தேவ் சாதனை தகர்ப்பு; மெக்ராத் கூட லிஸ்டில் இல்லை: மிட்செல் நியூ ரெக்கார்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com