Israel PM Benjamin Netanyahu | இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ரத்தன் டாட்டா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
February 6, 2025
Israel PM Benjamin Netanyahu | இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ரத்தன் டாட்டா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on: October 13, 2024 at 6:55 pm
Israel PM Benjamin Netanyahu | இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவின் மூத்த தொழில் அதிபர் ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா தனது 86வது வயதில் புதன்கிழமை (9 ஆம் தேதி) மாலை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரத்தன் டாட்டா மறைவிற்கு இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு எழுதியுள்ள பதிவில், இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த டாட்டாவின் பங்களிப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது நண்பரான பிரதமர் @narendramodi அவர்களுக்கு, இந்தியாவின் பெருமைமிக்க மகனும் நமது இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பின் சாம்பியனுமான ரத்தன் நேவல் டாட்டாவின் இழப்பிற்காக நானும், இஸ்ரேலில் உள்ள பலரும் இரங்கல் தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரத்தன் டாட்டாவின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலை தெரிவிக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார். முன்னதாக இரங்கல் தெரிவித்திருந்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழன் அன்று ரத்தன் டாட்டாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அதில், ரத்தன் டாட்டாவை சிங்கப்பூரின் உண்மையான நண்பர் என்று குறிப்பிட்டார்.
மேலும், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தனது இரங்கல் செய்தியில், புதுமை மற்றும் உற்பத்தியில் டாட்டாவின் பங்களிப்புகளைப் பாராட்டினார். அதே நேரத்தில் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளிலும் தொழில்களை வலுப்படுத்துவதில் அவரது பங்கை சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க : துபாயில் விமான டாக்ஸி பயன்பாடு எப்போது? இயக்குனர் முக்கிய தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com