Donald Trump: “தாம் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
Donald Trump: “தாம் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Published on: January 5, 2026 at 3:52 pm
நியூயார்க், ஜன.5, 2026: ரஷ்யா எண்ணெய் பிரச்சினையில் இந்தியா உதவவில்லை என்றால் சுங்கவரி உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பிரதமர் மோடி ‘நல்லவர்’ எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (ஜன.5, 2025) செய்தியாளர் சந்திப்பின் போது, “இந்தியா “ரஷ்யா எண்ணெய் பிரச்சினை” தொடர்பாக உதவவில்லை என்றால், அமெரிக்கா இந்திய இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்போதைய சுங்க வரிகளை மேலும் உயர்த்தக்கூடும்” என்றார்.
ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பு
#WATCH | On India’s Russian oil imports, US President Donald J Trump says, "… They wanted to make me happy, basically… PM Modi's a very good man. He's a good guy. He knew I was not happy. It was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very… pic.twitter.com/ANNdO36CZI
— ANI (@ANI) January 5, 2026
நன்றி: ஏ.என்.ஐ
மேலும், அவர் தனது உரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றியும் குறிப்பிட்டார். மோடி “நல்லவர்” என்றும், அமெரிக்க அதிபர் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதை அவர் நன்கு அறிந்தவர் என்றும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டது இந்தியாவின் ரஷ்யாவுடன் நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தைப் பற்றியது.
அவரது நிர்வாகம் இதற்கு நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையே காரணமாகக் கொண்டு 2025 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட சுங்கவரி இரட்டிப்பாக்கப்பட்டு 50% ஆக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நல்லடக்கம்.. ஜெய்சங்கர் பங்கேற்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com