ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Published on: November 21, 2024 at 4:54 pm
New bill in Australia | ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை உலகிலேயே முதல்முறையாக இயற்றியுள்ளோம் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும். இந்த கட்டமைப்பிற்கும் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com