மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் கல்லாப்பெட்டி கூட்டணி.. திமுகவை விமர்சித்த விஜய்!

Assembly Election 2026 : மக்கள் பணத்துல கை வைக்க மாட்டேன். இதை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் தவெக தலைவர் விஜய்.

Published on: April 8, 2026 at 3:56 pm

Updated on: April 8, 2026 at 4:04 pm

திருநெல்வேலி, ஏப் 8 2026: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜய், நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.

இந்த கூட்டணியை அவர் “கல்லாப் பெட்டி கூட்டணி” என குறிப்பிட்டு, பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முயற்சி நடைபெறுகிறது என குற்றம் சாட்டினார்.

எமோஷன்

திருநெல்வேலி தவெக பரப்புரையில் பேசிய விஜய், கரூர் விஷயத்தை பத்தி ஊருக்கே தெரியும். ஆனால் என் மேல பழி போடுறாங்க. விஜய் மீது இவ்வளவு பழியை போட்டும் அவருடன் மக்கள் நிற்கிறார்கள் என்று நினைத்தார்கள். ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள். என்னைசுற்றியுள்ளவர்களை வைத்து தேர்தல் நேரத்தில் பிரச்சினை செய்ய பார்த்தனர். அதுவும் நடக்கவில்லை.

மக்கள் விருப்பத்திற்கு எதிராக பணப் பலம் மற்றும் அதிகாரத்தை நம்பி வெற்றி பெற முயலும் அரசியல் காலம் முடிவுக்கு வர வேண்டும். இந்த தேர்தல் சாதாரண அரசியல் போட்டி அல்ல; மாற்றத்தை விரும்பும் மக்களின் தீர்ப்பாக இருக்கும்

மற்றவர்களுக்குதான் இது எலெக்ஷன், விஜய்க்கும், விஜய்யோடு நிற்பவர்களுக்கும் இது எமோஷன். எனக்கு ஒன்னுன்னா மக்களுக்கும், மக்களுக்கு ஒன்னுன்னா எனக்கும் கண்கள் கலங்கும் என்றார்.

ஊழல் ஆட்சி

ஆட்சி முழுக்க ஊழல் ஊழல் என்று ஊறிப்போய் நாறிப்போய் கிடக்கிறது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேப்பீங்க.

இரண்டரை வயது குழந்தையை திமுகவை சேர்ந்தவர் கொலை செய்தார். விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?மக்களுக்கு தப்பே நடக்காது. தப்பே நடக்க முடியாது. மக்கள் பணத்துல கை வைக்க மாட்டேன். இதை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் சொல்ல முடியுமா? தில் இருக்கா? என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார் தவெக தலைவர் விஜய்.

மேலும், ஒரு காமராஜர்தானா, ஒரு அண்ணாதானா ஒரு எம்ஜிஆர்தானா தமிழ்நாட்டுக்கு, வேறு யாராவது அவர்களை மாதிரி வந்து விடமாட்டார்களா என நீங்கள் ஏங்கியது தெரியும். அதனால்தான் தவெக வந்திருக்கோம்.

இது மாற்றத்திற்கான தேர்தல். தி.மு.க.வாலோ, மற்றும் பலராலோ ஒன்னும் செய்ய முடியாது. வரும் 23-ந் தேதி தேர்தலில் விசில் சின்னத்துக்கு ஓட்டுபோடுங்கள். அத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக வந்துள்ளன். இங்கு இருமுனை போட்டிதான். ஒன்று டி.வி.கே., இன்னொன்று டி.எம்.கே. ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள். இது விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க மு.க ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி அல்ல.. தமிழ்நாட்டின் செல்வந்த வேட்பாளர் யார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com