Chennai Chain Snatch : சென்னையில் மூதாட்டியின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரை டிராபிக் போலீஸார் ஒருவர் துரத்திப் பிடித்தார்.
Chennai Chain Snatch : சென்னையில் மூதாட்டியின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரை டிராபிக் போலீஸார் ஒருவர் துரத்திப் பிடித்தார்.

Published on: June 5, 2026 at 11:34 am
சென்னை, ஜுன் 5, 2026: சென்னை வியாசர்பாடியில் 68 வயது பெண்ணின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய 24 வயதான வடமாநில இளைஞரை போக்குவரத்துப் போலீசார் ஒருவர் துரத்திப் பிடித்துள்ளார். புதன்கிழமை காலை முர்த்திங்கர் தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புகார் அளித்த ஜி.சுந்தரி, வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண் ஆக பணியாற்றி வருகிறார். இவர், காலை 8 மணியளவில் தம்பியின் வீட்டிற்கு நடந்து சென்றபோது எதிரே வந்த இளைஞர் சங்கிலியை பறித்து ஓடினார்.
சுந்தரி சத்தம் போட்டதும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனே துரத்தி சந்தேக நபரை பிடித்தனர். அவர் 3.5 சவரன் எடையுள்ள சங்கிலியை பறித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில், குற்றவாளி உபேஷ்குமார் (24) ஜார்கண்டை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் கடந்த 15 நாட்களாக சென்னையில் ஒப்பந்த தொழிலாளி ஆக பணியாற்றி வந்துள்ளார். இவர், எண்ணூர் ஹைரோட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார்.
போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : சென்னை; தீயில் கருகிய 100 கார்கள்.. பள்ளிக்கரணையில் என்ன நடந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com