Tasmac Bill | டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறைக்கான சோதனை முயற்சியாக ராணிப்பேட்டையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமக இது 7 டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தக் கடைகள், ஆற்காடு, திமிரி, வானம்பாடி, ரத்தினகிரி, ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி ஆகும். இந்த கடைகளில் மது வாங்க வந்தவர்களுக்கு பில்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “இது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் விலை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்ற சர்ச்சை முடிவுக்கு வரும். மேலும், மது பிரியர்களுக்கு எந்த ரகம் பிடித்துள்ளது; எது அதிகம் விற்பனையாகிறது என்ற தகவலும் கிடைக்கும்” என்றார்.
கடந்த காலங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை அமைச்சர் வரை சென்றது. தொடர்ந்து, இது தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
Chennai Mayor Priya Play cricket Video: சென்னை மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி பெறுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது….
Chennai Cop suspended: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் வழக்கில் போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார் ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்….
Chennai BSNL female employee death: காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொன்ற கொடூர சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஜே ஜே நகர்…
சென்னையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது….
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்து வருவதால் 2-ம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்