Kamarajar 50th death anniversary | தமிழ்நாட்டின் முன்னாள் முதல்- அமைச்சர் கு. காமராஜரின் 50வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, திருநெல்வேலி தெக்ஷிணமாற நாடார் சங்கக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முனைவர் தாமஸ் வில்பர்ட் எடிசன் இதோ.
அன்னை சிவகாமியின் அருந்தவப் புதல்வனே…
குமாரசாமி தந்த சிப்பிக்குள் முத்தே…
விருதுநகர் ஈன்ற கோகினூர் வைரமே…
இறை பெயர் தாங்கிய மனித ராசாவே…
பெரியார் கண்டெடுத்த பெருமகனே…
பேதமை கொண்டவனும் பெருமை பெற வைத்தவனே…
அனைத்து சாதிகளும் போற்றும் அற்புதமே…
முதல்வர்களுக் கெல்லாம் முதல்வரே….
வித்தகன் உனக்கிணை எவனுமில்லை..
அரசியல் வாழ்வில் நீயோ பல்கலைக்கழகம்
உன் அறம் சார்ந்த ஆளுமை ஆட்சிக்கு இலக்கணமாய்
ஆசானுக்கு ஆசானாய் குன்றிலிட்ட விளக்காய்
உலகையெல்லாம் அடக்கியாண்ட மகாராணி
உனக்குணவு பரிமாறி கொண்டார் பெருமை
நம்மவன் ஒருவனை அவமதித்தானென்றே
தேடி வந்த அமெரிக்கனை சந்திக்க மறுத்ததென்ன…
ஒன்பதரை ஆண்டே ஆண்டாலும் இணையில்லா ஆட்சி தந்து பெருமை சேர்த்த
துறைகள் அத்தனையும் ஆளுமை சிறக்க
ஆண்டவன் (ஆட்சியாளர்கள்) ஒருவன் இல்லை என்றே முக்காலமும் கூறும் நீயே தலைவன் என்று
உன் போல் ஒருவரும் பிறக்கவில்லை இதுவரை,
உன் போல் ஒருவரும் பிறக்கவில்லை உனை விட சிறந்தவன் இனியில்லை உலகில்,
உனை விட சிறந்தவன் இனி இல்லை
உலகெல்லாம் தேடினாலும் உனக்கிணை ஒருவனில்லை
ஆயிரம் வருடம் தவம் இருந்தாலும்
உன்போல் ஒருவன் பிறக்க மாட்டான்…
இவ்வுலகில், உன்போல் ஒருவன் பிறக்க மாட்டான்…
எனவே,
பிறந்துவா மீண்டும் இவ்வுலகில்…!
இதையும் படிங்க
Olive Ridley turtle Death : வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், காலநிலை மாற்றத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு…
சென்னையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது….
Security Tightened on TN Railway Station: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன….
Air India Express flights cancel: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட் மற்றும் சென்னை, திருச்சி இடையேயான விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது….
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்