Dindigul | திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இலவச பயனாளியான இவரது வீட்டில் குண்டு பல்பு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் 9,200 யூனிட்கள் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளார் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது.
மேலும், இதற்கு கட்டணமாக ரூ.1,01,580 செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உதவி மின் பொறியாளரை அனுகியுள்ளார். அப்போது, கம்யூட்டரில் பதிவு செய்யும்போது இரண்டு ஜீரோ கூடுதலாக டைப் செய்ததால், இந்த கட்டணம் வந்ததாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் இலவச மின்சார பயனாளிக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொழில்நுட்ப கோளாறு ஆக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க
Dindigul: திண்டுக்கல்லில் அடிக்கடி வெடி சப்தம் கேட்பது ஏன் என்பது குறித்து நிலநடுக்கவியல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்….
Dindigul: திண்டுக்கல்லில் அரசு சார்பில் போட்டித் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்….
Dindigul: திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணி காதலியை கொன்று உடலை எரித்த காதலன் கைது செய்யப்பட்டான்….
Palani Rope Car | பழனி முருகன் கோவிலில் ரோப் கார் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது….
Palani Panchamirtam | பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்