சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
Published on: December 5, 2024 at 6:15 pm
Sewage mixed in drinking water | சென்னை பல்லாவரம் அருகே கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டம் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி, மோகனரங்கன் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு “குடிநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும், முடிவுகள் வர 3 நாட்கள் ஆகும். ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்தார். மேலும், ஆய்வு மாதிரிகளை விரைந்து வழங்க வலியுறுத்தி உள்ளோம் பாதிக்கப்பட்ட பகுதியில் மாநகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, இதுகுறித்து பேசிய அமைச்சர் தா. மோ. அன்பரசன், “குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. உட்கொண்ட உணவில் ஏதேனும் பிரச்சினையா என விசாரணை நடத்தி வருகிறோம். குடிநீரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த பகுதியில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆய்வு முடிவுகள் வந்ததும் தெரிந்துவிடும். மழைக்காலம் என்பதால் தினமும் தூய்மைப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com