ரசிகர்களின் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் அமரன்.
ரசிகர்களின் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் அமரன்.
Published on: December 5, 2024 at 3:09 pm
Amaran OTT Release | சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ‘அமரன்’ உலகளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது சிவகார்த்திகேயனின் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்தது. ‘அமரன்’ 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ் திரைப்படமாகும்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய, ‘அமரன்’ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படமாகும். படத்தில் மறைந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் -ஐ மனதில் நிறுத்துகிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பின் மூலம் கதைக்கு ஆழத்தையும் உணர்ச்சியையும் சேர்த்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு படத்தின் சிறப்பம்சமாக உள்ளது.
ரசிகர்களில் பெரும் வரவேற்பை பெற்ற அமரன் திரைப்படம் இன்று நெட்பிளிக்சில் வெளியாகி உள்ளது.இது ரசகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com