Seeman: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினரானது நானா அல்லது தொல் திருமாவளவனா என கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Seeman: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினரானது நானா அல்லது தொல் திருமாவளவனா என கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Published on: December 28, 2025 at 8:05 pm
Updated on: December 28, 2025 at 8:19 pm
சென்னை டிசம்பர் 28, 2025: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பார்த்து, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் குழந்தை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி விமர்சித்து இருந்தார். சீமான் மட்டுமல்ல நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயை பார்த்தும் தொல் திருமாவளவன் இவ்வாறு விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து பதில் அளித்த சீமான்,”என்னையையும் விஜயையும் பாரதிய ஜனதா பெற்றெடுத்த போது தொல் திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார்” என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்றும் சீமான் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், ” பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது நானா அல்லது தொல் திருமாவளவனா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் வாஜ்பாய்க்கு வீரவணக்கம் செலுத்தியது நாகரிகம் எனில் பாட்டன் பாதையை நான் பின்பற்றுவது மட்டும் அநாகரிகமா? பெரியார் குறித்து அண்ணா மற்றும் கருணாநிதி பேசாததை விடவா நான் அதிகம் பேசி விட்டேன் என்றும் சீமான் பதில் அளித்தார்.
இதையும் படிங்க; அறவழியில் போராடுபவர்கள் மீது அடக்கு முறையை கைவிடுக.. டிடிவி தினகரன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com