Rahul Gandhi : மு.க ஸ்டாலினை பிரதமர் மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என ராகுல் காந்தி கூறினார்.
Rahul Gandhi : மு.க ஸ்டாலினை பிரதமர் மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என ராகுல் காந்தி கூறினார்.

Published on: April 18, 2026 at 6:39 pm
சென்னை, ஏப்.18, 2026: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், உத்தரப் பிரதேச எம்.பி.யுமான ராகுல் காந்தி, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பரப்புரை செய்தார்.
அதாவது பொன்னேரி, சோளிங்கர், துறையூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க பல ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது என்றும் தற்போது இருப்பது பா.ஜ.க.வின் முகமூடி” என்றும் பேசினார்.
பெரியார் குறித்து ராகுல்
LIVE: Public Meeting | Thuraiyur, Tamil Nadu https://t.co/UreWg0Tt4d
— Rahul Gandhi (@RahulGandhi) April 18, 2026
மறைந்த திராவிடர் கழகத் தலைவர் பெரியார் குறித்து பேசுகையில், “பெரியாரின் சிந்தனைகள் மற்றும் தத்துவங்களை தகர்க்க பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் சதி செய்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், பெரியாரின் கொள்கையை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று கூறிய ராகுல் காந்தி? முதலில் கொள்கை பின்னர்தான் அரசியல் என்றார். தொடர்ந்து, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி பா.ஜ.க. கொள்கைகளை தடுத்து நிறுத்தும் என்று கூறிய ராகுல் காந்தி, மு.க ஸ்டாலினை ஒருபோதும் பிரதமர் மோடியால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார்.
இதையடுத்து, தமிழ்நாட்டு மக்களின் பலம் ற்றும் உறுதியை தேர்தல் நாளில் பா.ஜ.க.வினர் உணர்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மோடி அரசின் திட்டம் தோல்வி.. டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு.. மு.க ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com