திருப்பரன்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்.. பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakanth: திருப்பரன்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பரப்புரையில் ஈடுபட்டார் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரேமலதா விஜயகாந்த்.

Published on: April 17, 2026 at 6:56 pm

Updated on: April 17, 2026 at 6:59 pm

மதுரை, ஏப்.17, 2026: மதுரை திருப்பரன்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் வளாகத்தில் உள்ள தீபத் தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் முன்னதாக, தீபத் தூணில் விளக்கு ஏற்ற நீதிமன்றம் உத்தரவிடப்பட்டு இருந்தது. எனினும் இந்த உத்தரவை மாநில அரசு செயல்படுத்தவில்லை.

இதற்கிடையில், திருப்பரன்குன்ற தீபத்தூணில் விளக்கு ஏற்றப்படும் என பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார். திருப்பரன்குன்றம் வேட்பாளர் கிரித்திகா தங்கப்பாண்டியை ஆதரித்து பேசிய பிரேமலதா, “திருப்பரன்குன்றத்தில் நிச்சயமாக முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும் என்றார். மேலும், இங்குள்ள மக்களின் வாழ்க்கையும் உயரும். கிருத்திகா தங்கபாண்டி மக்களின் வாழ்க்கையில் தீபம் ஏற்றுவார்” என்றார்.

பிரேமலதா விஜயகாந்தின் இந்தப் பேச்சு, தி.மு.க. உள்பட கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருப்பரன்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்றுவோம் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.. தி.மு.க.

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com