Police explanation of rowdy seizing Raja encounter in Chennai | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் சீசிங் ராஜாவுக்கும் சம்பந்தம் இல்லை என சென்னை தெற்கு இணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.

February 17, 2025
Police explanation of rowdy seizing Raja encounter in Chennai | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் சீசிங் ராஜாவுக்கும் சம்பந்தம் இல்லை என சென்னை தெற்கு இணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.
Published on: September 23, 2024 at 3:30 pm
Updated on: September 23, 2024 at 3:31 pm
Police explanation of rowdy seizing Raja encounter in Chennai | சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி இன்று (செப்.23, 2024) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “வேறொரு வழக்கில் போலீசார் ஆந்திராவில் முகாமிட்டிருந்த போது சீசிங் ராஜா குறித்த தகவல் கிடைத்தது.
கடப்பாவில் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் அழைத்துச் சென்றனர். இரண்டு இடங்களில் துப்பாக்கி இங்குதான் இருக்கிறது என்றார். ஆனால் துப்பாக்கி கிடைக்கவில்லை. மூன்றாவதாக அவர் கூறிய இடத்தில் துப்பாக்கி இருந்தது. அந்தத் துப்பாக்கியை வைத்து, போலீசாரை சுட முயன்றார்.
இதில் போலீசாரின் வாகனத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த நிலையில் தற்பாதுகாப்புக்காக போலீசார் சுட்டதில் சீசிங் ராஜா உயிரிழந்துள்ளார்” என்றார். மேலும், “அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல; சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கவே நினைத்தோம்” என்றார். கோவையில் ரவுடியை காலில் சுட்டு பிடித்ததுபோல் பிடித்திருக்கலாமே என்ற கேள்விக்கு, “சம்பவம் நடந்த போது வெளிச்சம் இல்லை; புதருக்குள் இருந்து அவர் சுட்டார்.
இதனால் பாதுகாப்புக்காக போலீசார் சுட்டனர்” என்றார். சீசிங் ராஜாவின் மனைவி தனது கணவர் உயிருக்கு ஆபத்து என வீடியோ வெளியிட்டாரே என்ற கேள்விக்கு, “ரவுடிகளை பிடித்தாலே போலீஸ் என்கவுன்ட்டர் செய்துவிடும் என சிலர் மிரட்டுகின்றனர். இதன் வெளிப்பாடாக கூட அந்த வீடியோ வந்திருக்கலாம்” என்றார்.
இதையும் படிங்க : நேற்று கைது, இன்று என்கவுன்ட்டர்; யார் இந்த சீசிங் ராஜா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com