New Delhi Food Fair | டெல்லி உணவுப் பொருள்கள் கண்காட்சியில் தமிழ்நாட்டில் விளைந்த கோகோ பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

February 17, 2025
New Delhi Food Fair | டெல்லி உணவுப் பொருள்கள் கண்காட்சியில் தமிழ்நாட்டில் விளைந்த கோகோ பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
Published on: September 23, 2024 at 4:04 pm
New Delhi Food Fair | உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சார்பில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2024-ம் ஆண்டுக்கான உலக உணவு இந்தியா 4 நாள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தத் தொடக்க விழாவில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி, உணவு பதனப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் சிராக் பஸ்வான், இணை மந்திரி ரவ்னீத் சிங் பிட்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது, “கடந்த 10 ஆண்டுகளில், உணவு பதப்படுத்துதல் துறையில் பல சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், உணவு பதப்படுத்துதலில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கான திட்டங்களை உருவாக்கி உள்ளன” என்றார். இந்தக் கண்காட்சியில், 90-க்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இந்தியாவில் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கு பெற்றுள்ளன. கண்காட்சியானது, சுமார் 70 ஆயிரம் ச.மீ. பரப்பில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து விளைந்த கோகோ பயிர் மூலம் இயற்கையான முறையில் செய்யப்பட்ட சாக்லெட் விற்பனை நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், தமிழக பாரம்பரிய உணவுகள் இடம் பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஆசீர்வாதம்: டெல்லியின் 3வது பெண் முதலமைச்சரானார் அதிஷி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com