P Shanmugam : மேகதாது தீர்மானம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு கிடையாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
P Shanmugam : மேகதாது தீர்மானம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு கிடையாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Published on: June 21, 2026 at 9:27 pm
சென்னை ஜூன் 21 2026; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
— Shanmugam P (@Shanmugamcpim) June 21, 2026
எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி கொடுத்த திருத்தம் என்ன என்று சபைக்குச் சொல்லாமல், 'அதை நாங்கள்… pic.twitter.com/6n1WLlaDcZ
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொடுத்த திருத்தம் என்ன என்று சபைக்குச் சொல்லாமல், ‘அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்’ என்கிற அணுகுமுறை, தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பானது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அது என்ன திருத்தம் என்று தெளிவாக விளக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை. எனவே, திங்கட்கிழமை காலை அவை கூடியவுடன், “தானாக முன்வந்து இந்தத் திருத்தத்தைத் திரும்பப் பெறுகிறோம்” என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு.. வைகோ வெளியிட்ட அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com