மேகதாது விவகாரம்: எடப்பாடி பழனிசாமி நிலைப்பாடு குறித்து சபாநாயகர் கேள்வி

Speaker JCD Prabhakar : மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு அவையில் எதிர்ப்பு தெரிவிக்காத அ.தி.மு.க., பின்னர் கேள்வி எழுப்பியது ஏன் என சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் விளக்கம் கோரியுள்ளார்.

Published on: June 22, 2026 at 11:29 am

சென்னை, ஜுன் 22 2026: கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பின்னர் சேர்க்கப்பட்ட திருத்தம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எழுப்பிய எதிர்ப்புக்கு சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருத்தப்பட்ட தீர்மானம் சட்டப்பேரவை விதிமுறைகளுக்கு முரணானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த அரசுத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறு சட்டத்தின் கீழ் தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தீர்மானத்தில் சேர்க்குமாறு வலியுறுத்தினார். இதை ஏற்ற முதலமைச்சர், தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்தார்.

அதன்பிறகு, “திருத்தங்களுடன் கூடிய தீர்மானம்” மீது சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்த, அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி அல்லது அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், சுமார் 10 மணி நேரம் கழித்து மட்டுமே அதற்கு எதிராக கருத்து தெரிவித்தது ஏன் என்ற கேள்வியை சபாநாயகர் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகர், சட்டப்பேரவையில் ஏற்கப்பட்ட தீர்மானம் குறித்து தொடர்ந்து விவாதிப்பது சட்டப்பூர்வமாகவும் நடைமுறையாகவும் பொருத்தமல்ல எனக் குறிப்பிட்டார். திருத்தங்களுடன் தீர்மானம் ஏற்கப்பட்டுள்ளதால், அதனை மீண்டும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது மீண்டும் திருத்தம் கொண்டு வருவது அவை மீறல்” என்று கூறினார்.

இதையும் படிங்க உதயநிதி கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com