மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது.. மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!

Anbumani on Mekedatu Row: ‘மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது; தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் யோசனையை திரும்பப் பெறுங்கள்’ என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Published on: June 22, 2026 at 11:48 am

சென்னை ஜூன் 21, 2026; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதால் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட அரசினர் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டிருப்பதற்கு உழவர் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேகதாது அணை சிக்கலில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில், அதை வலியுறுத்தாமல் மத்திய அரசை மத்தியஸ்தம் செய்யக் கோருவது தமிழகத்தின் உரிமைகளை நாமே அடகு வைப்பதாக அமைந்து விடும்” என எச்சரித்துள்ளார்.

மேலும், “மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை சட்டப்போராட்டம் மற்றும் அரசியல் அழுத்தத்தின் மூலமும் தான் பாதுகாக்க முடியும். இதற்கான தமிழக அரசின் முயற்சிகளுக்கு பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாகத் தான் உள்ளன. இத்தகைய சூழலில் மேகதாது அணை சிக்கலுக்கு தீர்வு காண தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் கர்நாடகத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. எனவே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தனி நடுவர் மன்றம் குறித்த பகுதிகளை உரிய பேரவை விதிகளை பின்பற்றி நீக்கி விட்டு, அதன்பிறகே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க; மேகதாது விவகாரம்: எடப்பாடி பழனிசாமி நிலைப்பாடு குறித்து சபாநாயகர் கேள்வி

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்க.. அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்க.. அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com