முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு.. தி.மு.க.வினர் கைது.. மு.க ஸ்டாலின் கண்டனம்

MK Stalin : முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கும், தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதற்கும் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: June 29, 2026 at 3:27 pm

Updated on: June 29, 2026 at 3:28 pm

சென்னை, ஜூன் 29, 2026: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்க்கட்சிகளை விமர்சித்ததற்காக கைது செய்வதும், வழக்குகள் பதிவு செய்வதும், வீடுகளில் சோதனை நடத்துவதும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் அகங்காரத்தை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார். மேலும், “மக்களே பாடம் புகட்டுவார்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “அமைச்சருக்கு எதிராக போராட்டம் செய்த திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியை விமர்சித்ததால் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. அதேசமயம், ஆட்சியை விமர்சிப்பது அரசியல் கட்சிகளின் உரிமை என்றும், அதை அடக்க முயல்வது மக்களால் ஏற்கப்படாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க தமிழக அரசியலில் பரபரப்பு.. கரூர் எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com