Chennai Mayor Priya Play cricket Video: சென்னை மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி பெறுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
Chennai Mayor Priya Play cricket Video: சென்னை மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி பெறுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
Published on: February 13, 2025 at 3:07 pm
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு திமுக சார்பு அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தப் போட்டிகள் பகல் இரவு ஆட்டமாக மெரினா விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன.
இதனை முன்னிட்டு மேயர் பிரியா சிறிது நேரம் கிரிக்கெட் ஆடி பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் திமுக அணிகள் பங்கு பெறுகின்றன.
இந்த கிரிக்கெட் போட்டிகள் சேப்பாக்கத்தில் உள்ள மெரினா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன. இந்த கிரிக்கெட் போட்டிகள் திமுகவினர் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை.. ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com