Kanimozhi condemns Seemans speech: இதைவிட பெண்களுக்கு கேவலமாக பேச முடியாது என சீமானுக்கு எதிராக கொந்தளித்துள்ளார் தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி.
Kanimozhi condemns Seemans speech: இதைவிட பெண்களுக்கு கேவலமாக பேச முடியாது என சீமானுக்கு எதிராக கொந்தளித்துள்ளார் தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி.
Published on: March 1, 2025 at 9:21 pm
சென்னை, மார்ச் 01, 2025:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் 2011 ஆம் ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை ரத்து செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் சீமான் மீதான பாலியல் வழக்கை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் சீமான் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை போலீசார் சீமானின் வீட்டின் கதவில் ஒட்டிச் சென்றனர். இந்தச் சம்மன் சீமான் வீட்டில் உள்ள உதவியாளர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.
இதையும் படிங்க என்ன சம்பவம் செஞ்சிங்க விஜய்? நடிகர் சரத்குமார் கேள்வி
இந்த விஷயத்தில் விசாரணை நடத்த சென்ற போலீசு அதிகாரியை தடுத்ததாக சீமான் வீட்டின் காவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் வழக்கு குறித்து விளக்கம் அளித்த சீமான், “அது விருப்பத்தின் பெயரில் நடந்த ஒன்று. இதுகுறித்து தொடர்ந்து பேச விருப்பமில்லை. ஏற்கனவே நான் பலமுறை விளக்கம் அளித்து விட்டேன்” என்றார். மேலும் அவரிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்ப அவர் சர்ச்சைக்குரிய சில பதில்களை கூறினார்.
சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த விவகாரம் தொடர்பாக, சீமானுக்கு பரபரப்பு கேள்விகளை முன் வைத்துள்ளார் திமுக எம்பி கனிமொழி. இதுகுறித்து அவர் பேசுவையில், ” இதைவிட பெண்களை கேவலமாக பேச முடியாது; இதையெல்லாம் கேட்டுக் கொண்டு எப்படி சகித்துக் கொண்டு அந்த கட்சியிலும் அவர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என தெரியவில்லை. அவர் கட்சியிலும் அவர் வீட்டிலும் உள்ள பெண்கள் இதுபற்றி கேட்க வேண்டும் ” என்றார்.
இதையும் படிங்க தொகுதி மறுசீரமைப்பு புரளி.. எதற்காக அனைத்துக்கட்சி கூட்டம்.. அண்ணாமலை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com