All Party Meeting: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் புரளி கிளப்புகிறார்கள்; எதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
All Party Meeting: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் புரளி கிளப்புகிறார்கள்; எதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
Published on: March 1, 2025 at 6:38 pm
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கோ அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் என திமுகவினரிடம் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பேசிய அண்ணாமலை, ” திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தொகுதி மறு சீரமைப்பு குறித்து புரளி கிளப்புகிறார்கள். மேலும் மக்கள் தொகை அடிப்படையில் தான் தொகுதி மறு சீரமைப்பு செய்வது என்பது காங்கிரசின் திட்டம்.
இதுகுறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. அதன் பின்னரும் எதற்காக இந்த அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி பங்கேற்காது.
இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு முறையாக கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் காவலர் கைது செய்யப்பட்ட விதம் சரியல்ல என தன் கருத்தை முன்வைத்த தமிழக பாஜக தலைவர், ” சம்மன் பெறப்பட்ட பின்பு ஒருவர் ஆஜராகவில்லை என்றால்தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக இது குறித்து பேசிய அண்ணாமலை, “சீமான் வீட்டில் சம்மனை ஒட்டி காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் சரியில்லை” என்றார். தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அனைத்து கட்சி கூட்டம் 2025 மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் உட்பட பல்வேறு கட்சிகளுக்கு ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் கு அண்ணாமலை தெளிவுபடுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மார்ச் மூன்றாம் தேதி.. வீட்டிலேயே விடாமுயற்சி பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com