Thol Thirumavalavan:“தமிழக அரசுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட யூ-ட்யூபர்கள் மீதான நடவடிக்கையை வரவேற்கிறேன்” என வி.சி.க தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thol Thirumavalavan:“தமிழக அரசுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட யூ-ட்யூபர்கள் மீதான நடவடிக்கையை வரவேற்கிறேன்” என வி.சி.க தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Published on: September 30, 2025 at 3:55 pm
சென்னை, செப்.30, 2025: வி.சி.க தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.30, 2025) ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசிய யூ-ட்யூபர்கள் மீதான நடவடிக்கையை வரவேற்கிறேன்” என்றார்.
தொல். திருமாவளவன் பேட்டி
(நன்றி. ஏ.என்.ஐ)#WATCH | Chennai, Tamil Nadu: On Karur stampede, VCK chief Thol. Thirumavalavan says, "Karur tragedy is very serious and sensitive. The entire Tamil Nadu is shocked. In this situation, some YouTubers and social media activists are making false propaganda against Tamil Nadu Govt,… pic.twitter.com/l2fXuuiHVm
— ANI (@ANI) September 30, 2025
இது தொடர்பாக மேலும் பேசிய தொல். திருமாவளவன் எம்.பி., “கரூர் துயர சம்பவம் மிகவும் தீவிரமானது மற்றும் உணர்வுபூர்வமானது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது” என்றார்.
யூ-ட்யூபர்கள் கைதுக்கு வரவேற்பு
இந்தச் சூழ்நிலையில், சில யூடியூபர்களும் சமூக ஊடக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு எதிராக எந்த தரவுகளோ அல்லது ஆதாரங்களோ இல்லாமல் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இது நியாயமில்லை. எனவே, நமது தமிழக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது, இதை நான் வரவேற்கிறேன்” என்றார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணம் அடைந்தார்கள். இது தொடர்பாக வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :‘தமிழ்நாட்டில் இரத்தக்களரியை விரும்புகிறார்.. அது நடக்காது’.. வைகோ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com