Assembly Election 2026: வி.சி.க., தி.மு.க. இடையே இன்று தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
Assembly Election 2026: வி.சி.க., தி.மு.க. இடையே இன்று தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Published on: March 2, 2026 at 11:35 am
Updated on: March 2, 2026 at 1:06 pm
சென்னை, மார்ச் 2, 2026: 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க., வி.சி.க. இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
தொல். திருமாவளவன் எம்.பி.யின் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆக, இம்முறை 12 தொகுதிகள் வரை போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் (மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்), வி.சி.க, தே.மு.தி.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. இதற்கிடையில், காங்கிரஸ் 39 தொகுதிகள் வரை போட்டியிட விரும்புகிறது. மேலும், ராஜ்யசபா சீட்டும் கோருகிறது. இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தலில் உரிய பிரதிநிதித்துவமும் கோருகிறது. கடந்த காலங்களில், உள்ளாட்சி தேர்தலில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை தி.மு.க.வினர் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், கடந்த காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கோரிய காங்கிரஸ், தற்போது அதுகுறித்து பேசுவதில்லை. இது தொடர்பாக பதில் அளித்த தொல். திருமாவளவன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது அவர்களின் உரிமை. எங்களைப் பொறுத்தவரை தேவை இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுகவுக்கு விட்டுக் கொடுத்தோம்.. 25 தொகுதிகள் போதாது.. காங்கிரஸ் சோடங்கர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com