பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா பிரதமர் சந்திப்பு.. 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.. முழு விவரம்!

India – Canada Agreements: இந்தியா மற்றும் கனடா முக்கிய கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

Published on: March 2, 2026 at 8:30 pm

புதுடெல்லி, மார்ச் 2, 2026: இன்று இந்தியா மற்றும் கனடா முக்கிய கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை உள்ளடக்கிய மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி, நியூடெல்லி ஹைதராபாத் ஹவுஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்தியா–கனடா மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர்.

இதையடுத்து, வர்த்தகம், முதலீடு, ஆற்றல், வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் நடந்து வரும் ஒத்துழைப்பை ஆய்வு செய்தனர்.
இந்தச் சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். அனைத்து பிரச்சினைகளும் உரையாடல் மற்றும் தூதரக வழிமுறைகளால் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா ஆதரிக்கிறது என்றார்.

இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து, பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் மதவெறி ஆகியவை இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, மனிதகுலத்திற்கே பொதுவான சவால்கள் என்று வலியுறுத்தினார். இவற்றுக்கு எதிரான நெருக்கமான ஒத்துழைப்பு உலக அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அவசியம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்நிலையில், இரு நாடுகளும் 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ளன. விரைவில் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (CEPA) நிறைவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
மேலும், பாதுகாப்புத் துறை, கடல் பாதுகாப்பு மற்றும் இராணுவ பரிமாற்றங்களை மேம்படுத்த இந்தியா–கனடா பாதுகாப்பு உரையாடலை நிறுவ முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமர் மாளிகையை குறி வைத்த ஈரான்.. பெஞ்சமின் நேதன்யாகு என்ன ஆனார்?

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு! Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com