Kanyakumari | முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கோவில் கொண்டுள்ள பகவதி அம்மன் திருக்கோவிலின் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை திருக்கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. அங்கு தினம்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் சில பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம். மேலும் சில பக்தர்கள் கன்னியாகுமரியில் தரிசனம் செய்து விட்டு ஐயப்ப சுவாமியை காண செல்வதும் வழக்கம்.
இதனால் கன்னியாகுமரியில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நற்செய்தியாக, குமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பர்கள் 12 30 மணிக்கு சாத்தப்படும். அதேபோல், மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூடப்படும். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக நண்பகல் அரை மணி நேரமும் இரவு அரை மணி நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில் நடை ஆனது நண்பகல் 1:00 மணிக்கும் இரவு 9:00 மணிக்கு சாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Immanuel Sekaranar Memorial Day: இம்மானுவேல் சேகரனார் நினைவுதினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்…
7 KG GANJA SEIZED : சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்…
DMK Protest : தமிழக முதலமைச்சர் விஜய் தமிழக சட்டப்பேரவையில் பேசும்போது, கருணாநிதி மு.க ஸ்டாலின் தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்காக, திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது….
TN By-Polls: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6-ம்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்