காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு சாத்தியம்; மாணிக்கம் தாகூர்

Congress MP Manickam Tagore | தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு சாத்தியம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

Published on: October 3, 2024 at 7:29 pm

Congress MP Manickam Tagore | தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொள்கையை கொண்டுவருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மதுவிலக்கு என்பது காந்தியும் காமராஜரும் என காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தவரை தமிழகத்தில் மது என்பது இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும். இப்போது இருக்கும் காலத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டனுடைய குறிக்கோளும் மதுவை ஒழிப்பது.

ஆனால் அரசியல் பலம் என்பது வேறு கொள்கையின் ஈடுபாடு என்பது வேறு. அரசியல் பலத்தை பொறுத்தவரை மக்களின் எண்ணங்கள் எப்போது மாறுகின்றதோ, மக்கள் எப்போது எங்களுடைய உண்மையாக எண்ணத்தை புரிந்து கொள்கிறார்களோ, எப்போது எங்களுடைய வலிமையை புரிந்து கொள்கிறார்களோ அன்று காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் மீண்டும் இந்த கொள்கையை கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது என்றார்.

கடந்த சில வாரங்களாக விசிக -வின் மது விலக்கு தொடர்பான வாதங்கள் தி.மு.க. – வி.சி.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், காங்கிரஸ் அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது.

இதையும் படிங்க

கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி, TVK கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் எம்பி சசிகாந்த் பரபரப்பு பேட்டி! Sasikanth

கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி, TVK கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் எம்பி சசிகாந்த் பரபரப்பு

Sasikanth: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளதால் தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்! Minister Viswanathan on Mekedatu

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!

Minister Viswanathan on Mekedatu : காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம் எனக் கூறிய தமிழக அமைச்சர் விஸ்வநாதன், மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதிக்க…

பெண்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறு வரையறை மசோதா.. நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்! Robert Bruce

பெண்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறு வரையறை மசோதா.. நெல்லை

Robert Bruce: கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில், தொகுதி வரையறை மசோதா கொண்டுவரப்பட்டது என திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்…

மேகதாது அணை விவகாரம்.. தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா? காங்கிரஸூக்கு பா.ஜ.க கேள்வி Nainar Dares Congress

மேகதாது அணை விவகாரம்.. தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா? காங்கிரஸூக்கு பா.ஜ.க

Nainar Dares Congress : தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா என காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு…

ஆளுநரை சந்தித்தது ஏன்? காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்! Minister Viswanathan Explains

ஆளுநரை சந்தித்தது ஏன்? காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

Minister Viswanathan Explains : ஆளுரை சந்தித்தது ஏன் என்பது குறித்து அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com