சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் திக் திக்.. மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு தலைமறைவு!

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்படும் வரும் போலீஸ் தலைமை ஏட்டு கமலக்கண்ணன் (42) தலைமறைவாகிவிட்டார்.

Published on: September 3, 2024 at 2:14 pm

Chennai medical student sexual abuse | சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் தலைமை ஏட்டு ஆக பணிபுரிந்துவரும் 42 வயதான கமலக்கண்ணன் ஆக.25ஆம் தேதி சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்துள்ளார். இவர் அங்கிருந்து செங்கல்பட்டு செல்ல இரவு 9 மணியளவில் காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு தனியாக நின்ற மருத்துவ மாணவியிடம் பாலியல் ரீதியாக சைகை காட்டி ஆபாசமாக அழைத்துள்ளார். மேலும், அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ மாணவி சப்தமிட்டு கூச்சலிட்டார்.

இதனால் ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் மாணவியை காப்பாற்றினார்கள். மேலும், கமலக்கண்ணனை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மறுநாள் கமலக்கண்ணன் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரை விசாரிக்க ரயில்வே போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் விசாரணை கைது நடவடிக்கைக்கு பயந்து கமலக்கண்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் கமலக்கண்ணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், சம்பவம் நடந்த ஆக.25ஆம் தேதி கமலக்கண்ணன் குடிபோதையில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க : தனிநபர் புகைப்படம் பதிவேற்றம்.. 3 ஆண்டு ஜெயில்: போலீஸ் எச்சரிக்கை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com