Chennai flight schedule | மோசமான வானிலை காரணமாக விமான சேவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என ஏஏஐ தெரிவித்துள்ளது.
Chennai flight schedule | மோசமான வானிலை காரணமாக விமான சேவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என ஏஏஐ தெரிவித்துள்ளது.
Published on: October 15, 2024 at 12:22 pm
Chennai flight schedule | கனமழையின் போது விமான சேவைகளை மேற்கொள்ளும் முறைகள் பற்றிய முக்கிய கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று ( திங்கள் கிழமை) எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை. ஆனால், மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாக இருந்ததாக இந்திய விமானப்பாதை ஆணையம் (AAI)தெரிவித்துள்ளது. மழைகாரணமாக, பொருட்களை விமானங்களில் ஏற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இன்றும் நாளையும் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) வழக்கமான அட்டவணைபடி விமான சேவைகள் தொடரும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “விமானங்கள் பொதுவாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால், விமான சேவையில் தாமதங்கள் அல்லது ரத்து ஏற்படலாம்” எனவும் தெரிவித்துள்ளனர்.
மழையில் பயணம் செய்வதை தவிர்க்கவும், ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து முன்பே பயணிகளுக்கு அறிவிக்கவும் ஏஏஐ விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையத்தில் ஏற்படும் திடீர் குழப்பத்தை தவிர்க்க, பயணிகள் வீடுகளில் இருந்து புறப்படும் முன்பே தங்கள் விமான நிறுவனத்தை தொடர்புகொண்டு விசாரித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஓடுபாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ; வெளுத்து வாங்கப்போகும் கனமழை ; வானிலை மையம் எச்சரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com