Chennai Corporation: சென்னையில் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Corporation: சென்னையில் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: March 31, 2025 at 2:34 pm
Updated on: March 31, 2025 at 2:38 pm
சென்னை மார்ச் 31 2025: சென்னையில் சொத்து வரி செலுத்த இன்று (மார்ச் 31 2025) கடைசி நாள் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் கடும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சொத்து வரி செலுத்துதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்தி குறிப்பில், ” சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்த இன்று (மார்ச் 31 2025) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை (ஏப்ரல் 1 2025) முதல் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு மாதம் ஒரு சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. தொடர்ந்து, 2024- 25 ஆம் நிதி ஆண்டு இன்றுடன் முடிவடைய உள்ளதால் நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்த வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை எங்கு செலுத்தலாம்?
இந்த சொத்து வரியை மாநகராட்சி அலுவலகங்கள் இ சேவை மையங்கள் மூலமாக செலுத்திக் கொள்ளலாம். மேலும் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் சொத்து வரியை செலுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க இஸ்லாமிய பெருமக்களுக்கு பாதுகாப்பாக அதிமுக இருக்கும்.. எடப்பாடி பழனிச்சாமி புனித ரமலான் வாழ்த்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com