IPL 2025: இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர்கொள்கிறது.
IPL 2025: இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர்கொள்கிறது.
Published on: March 31, 2025 at 3:14 pm
மும்பை மார்ச் 31 2025: உலகளாவிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகின்றன. இந்த ஐ.பி.எல். போட்டியில் இன்றைய ( மார்ச் 31 2025) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இன்றைய கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில், மாலை ஏழு முப்பது மணிக்கு தொடங்குகிறது. 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன் அணி பதக்கப் பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டி சொந்த மண்ணில் நடைபெறுவதால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது என நெட்டிசன்கள் பெரும்பாலும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் பலமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹைதராபாத் அணிக்கு செம்ம அடி.. 16 ஓவரில் மேட்சை முடித்த டெல்லி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com