IPL 2025 SRH vs DC Delhi capitals: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று பிற்பகல் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. டெல்லியை பொருத்தமட்டில் 16 ஓவரில் வெற்றியை எட்டி பிடித்தது.
IPL 2025 SRH vs DC Delhi capitals: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று பிற்பகல் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. டெல்லியை பொருத்தமட்டில் 16 ஓவரில் வெற்றியை எட்டி பிடித்தது.
Published on: March 30, 2025 at 11:57 pm
Updated on: March 31, 2025 at 12:05 am
ஹைதராபாத் மார்ச் 30 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் இடையிலான இன்றைய (மார்ச் 30 2025) ஐபிஎல் போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது.
மாலை மூன்று முப்பது மணிக்கு இந்த கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அபிஷேக் ஷர்மா மற்றும் ட்ரா விஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அபிஷேக் ஷர்மா ரன் அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார். அப்போது அவர் ஒரு ரன் எடுத்திருந்தார். அடுத்து களம் கண்ட இஷான் கிஷனும் சரியாக ஆடவில்லை. ஐந்து பந்துகளில் இரண்டு ரன்னில் மிச்சல் ஸ்டாக் பந்துவீச்சில் அவுட் ஆகி நடையை கட்டினார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு இறங்கிய நிதீஷ் குமார் வெட்டியும் இரண்டு பந்துகள் சந்தித்த நிலையில் ஒரு ரன்கூட எடுக்காமல் மிச்சல் ஸ்டாக் வந்து வீச்சில் அவுட் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த அங்கீத் வருமா டிராவிஸ் ஹெட்டுக்கு கை கொடுத்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் 12 பந்துகளில் 22 ரன்கள் அடித்திருந்த டிராவிஸ் ஹெட் மிச்சல் பந்துவீச்சில் கே எல் ராகுலிடம் கேச் ஆகி அறைக்கு திரும்பினார். அவர் நான்கு பவுண்டரிகள் விலாசி இருந்தார்.
இதைத்தொடர்ந்து களத்திற்கு வந்த ஹேயின் ரிச் அதிரடி ஆட்டம் காட்டினார். அவர் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். மறுபுறம் அங்கீத் வர்மா அரை சதம் கடந்தார். இதற்கிடையில், ஹேயின் ரிச் 32 ரன்னில் அவுட் ஆக, அதன் பின்னர் அங்கீத் வர்மாவும் 74 ரன்னில் நடையை கட்டினார். இவர் ஐந்து பவுண்டரி ஆறு சிக்ஸர்கள் என வானவேடிக்கை நிகழ்த்தினார்.
மற்ற வீரர்கள் சொற்ப இரணில் அவுட் ஆக, ஹைதராபாத் அணி 18 புள்ளி நான்கு ஓவரில் 163 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அவுட் ஆனது.
டெல்லி கேப்பிட்டல் பேட்டிங்
அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல் அணி பேட்டிங்கை தொடந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் மற்றும் பாப் டூப்ளிசிஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த இருவரும் ஹைதராபாத்தில் பந்துவீச்சை நாலாபுரமும் நொறுக்கி எடுத்தனர். அபாரமாக விளையாடிய பாப் டூப்ளிசிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஜாக்கும் தன் பங்கிற்கு 32 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அபிஷேக் போரில் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடங்கும். இவர் கடைசி வரை அவுட் ஆகவில்லை. விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சீசன் அன்சாரி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி நடையை கட்டினார். இவர் ஐந்து பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விலாஸ் இருந்தார்.
இவருக்குப் பின் இறங்கிய திரிஷ்டன் ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகள் அடங்கும். இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல் அணி 16 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியை பொறுத்தவரை சீசன் அன்சாரி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
முகமது சமி, அபிஷேக், பேட் கம்மின்ஸ், ஹர்ஷல் பட்டேல் மற்றும் வியான் முல்தார் ஆகியோர் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை. இந்த நிலையில் 24 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அபார வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படிங்க: IPL 2025: விராத் கோலி சம்பளம் தெரியுமா? வரி மட்டுமே இத்தனை கோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com